"கோ" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, முதல் படத்திலேயே நல்ல பெயரை எடுத்திருப்பவர் நடிகை கார்த்திகா. மாஜி நடிகை ராதாவின் மகளான இவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தன் மகளுக்கு நடிகை ராதா சில அட்வைஸ்களை தெரிவித்திருக்கிறாராம்.
இதுபற்றி ராதா அளித்துள்ள பேட்டியொன்றில், கர்த்திகாவை பெரிய டான்சர் ஆக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. அதே சமயம் அவளுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்குச் சுதந்திரமும் கொடுத்திருந்தோம். அவளும் சிறு வயதிலிருந்தே முறையாக பரத நாட்டியம் கற்றுக்கொண்டாள். படிப்பிலும் சுட்டி. அவளுடைய முதல் பரதநாட்டிய அரங்கேற்றம் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் நடைபெற்றது. பல சினிமா வாய்ப்புகள் வந்தன. தமிழில் நல்ல டைரக்டர், நடிகர் படத்தில் அறிமுகமாக வேண்டும் என விரும்பினேன்.
ஆனால் அதற்குள் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடித்த "ஜோஷ் படத்தில் அறிமுகமாக வேண்டிய சூழ்நிலை. படம் ஓரளவு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகுதான் "கோ பட வாய்ப்பு கிடைத்தது. அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளதில் குடும்பமே சந்தோஷத்தில் உள்ளோம். நான் கார்த்திகாவிடம் அடிக்கடி சொல்லும் விஷயம்... ""நான் 1980 முதல் 92 வரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன். அப்போது எனக்கு இருந்த புகழ் என்னவென்று எனக்கே தெரியவில்லை. இப்போது ஒரு முன்னணி நடிகையே, மூன்று அல்லது நான்கு ஆண்டுகள்தான் தாக்குப் பிடிக்க முடிகிறது. அதனால் வெற்றி வந்தவுடன் கர்வம் கொள்ளாமலும், எல்லை தாண்டாமலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறைந்தது பத்து படங்களில் நடித்து முடிக்கும் வரையில் நாம் இன்னமும் ஒரு புதுமுகம்தான், என நினைத்துக்கொண்டு ஃபீல்டில் கவனம் செலுத்த வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்காமல் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதுதான் அது.

No comments:
Post a Comment