ஒரு காலத்தில் உலகையே கலக்கிய சக்கை போடு போட்ட திரைப்படமான ரைட்டானிக் திரைப்படத்தின் கதாநாயகியான கேத் வின்ஸ்லெட் மயிரிழையில் உயிர் தப்பினார்.
பிரித்தானியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சனுக்குச் சொந்தமான நெகர் தீவில் ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது.
அங்கு ரிச்சர்ட்டின் நண்பரான ரைட்டானிக் கதாநாயகியான கேத் வின்ஸ்லெட் குடும்பத்தினருடன் விடுமுறையில் தங்கியிருந்தார். இவர்கள் தங்கியிருந்த பங்களாவின் ஒருபகுதி திடீரென நேற்றைய தினம் தீப்பிடித்தது.
அனைவரும் கண்விழித்த போதும் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவெனப் பரவியது. அந்த நேரம் கேத் வின்ஸ்லெட் அவரது குடுமபத்தினருடன் உயிர் தப்பினார். பங்களா முழுவதும் தீயில் பொசுங்கி விட்டது.
அங்கு ஏற்பட்ட இடியுடன் கூடிய மின்னலே அசம்பாவிதத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment