Thursday, September 1, 2011

இந்திய அமைதி காக்கும் படை மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டை மறக்க வேண்டாம் - ரஜீவ

தமிழர் பிரச்சனைக்கு ஒரு நீடித்த தீர்வை வழங்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தொடர்ந்தும் இரண்டு அணுகுமுறைகளை பின்பற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் இன நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் ஊடான பேச்சுவாரத்தையும், பாராளுமன்ற தெரிவுக் குழுவின் ஊடான முயற்சியுமே அவ்விரண்டு அணுகுமுறைகளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும் சமரசமும் விரைவாக ஏற்படுத்தப்பட்டு வருவதனை இந்தியா மற்றும் தமிழக அரசு ஆகியன விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பிரச்சாரத்துக்கு அப்பால் சென்று பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சமரம் அவசியமானதே தவிர பழிவாங்கும் உணர்வு அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வைத்தியசாலைக்கு குண்டு வைத்ததோ மற்றும் பொதுமக்களை கொலைசெய்ததோ நாங்கள் அல்ல என தெரிவித்த ரஜீவ, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையில் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைகள் செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டினை எவரும் மறந்திருக்க மாட்டீர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜானாதிபதி தமிழ் கற்று வருவதாகவும், சில அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் ஜனாதிபதியை சிங்களத் தலைவர் என ஒப்புவிப்பதாகவும் தெரிவித்த அவர், எந்த சிங்களத் தலைவர் இதற்கு முன்னர் தமிழ் கற்றுக் கொண்டார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

free counters