Thursday, November 3, 2011

சல்மான் பட்டுக்கு 30 மாத சிறை

பாகிஸ்தான் முன்னாள் தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆசிப் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை லண்டன் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது .

சல்மான் பட் பணத்தைப் பெற்றுக்கொண்டு சதி செய்ததாகவும், ஆசிப் மோசடியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியதாகவும் 12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு கூறியுள்ளது.

2010ல் இங்கிலாந்துக்கு எதிரான ரெஸ்ட்டில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், கிரிக்கெட் சூதாட்ட தரகர் மஜீத்துக்கு 32 மாதம் சிறை தண்டனை வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட்டுக்கு 30 மாத சிறை தண்டனையும், வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஆசிப்பிற்கு ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters