Tuesday, November 22, 2011

இலங்கைக்கு பிரித்தானியா ஆலோசனை..!

இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய சபை காரியாலயம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கை தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து மீண்டெழ இவ்வறிக்கை விசேட ஏற்பாடாக இருக்கும் என பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய சபை காரியாலயம் அமைச்சர் எலஸ்டயார் பர்ட் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய ஒற்றுமை மற்றும் பொறுப்புக்கூறுதல் என்பவற்றை இலங்கை அரசு காட்சிப்படுத்துவதற்கு நல்லிண்ணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்வதாக பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய சபை காரியாலயம் அமைச்சர் எலஸ்டயார் பர்ட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

free counters