ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்காவின் நேட்டோ படைகள் நடத்திய வான்
தாக்குதல்கள் உலக அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளன. இது தொடர்பாக விரிவான
விசாரணை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த 26ம் திகதி
அதிகாலை பாகிஸ்தானின் மொஹ்மந்த் பழங்குடியினப் பகுதியில் ஆப்கானிஸ்தான்
எல்லையில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள சலாலா எல்லைச் சாவடி மீது
நேட்டோ-ஆப்கன் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், 24 பாகிஸ்தான் வீரர்கள்
பலியாயினர்.
இச்சம்பவம் ஏற்கனவே சிக்கலில் உள்ள அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில்
மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான
பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜியார்ஜ் லிட்டில் கூறுகையில், நேட்டோ படை
தாக்குதல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
தற்போதுள்ள சிக்கலான நிலையில் பாகிஸ்தான்- அமெரிக்க உறவுகள் குறித்து
நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அமெரிக்காவின் மத்திய படைபிரிவு
தலைவர் தலைமையிலான குழு விரிவான விசாரணை நடத்தும் என்றார்.

No comments:
Post a Comment