நித்தியானந்தாவை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படமான சத்தியானந்தா படத்தை வெளியிட பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நித்யானந்தா - ரஞ்சிதா சர்ச்சைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் புதிய படம் சத்தியானந்தா.
இந்த படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த படத்தை வெளியிடத் தடை விதித்தார். சத்யானந்தா படத்தை விளம்பரப்படுத்தவோ, விநியோகஸ்தர்களிடம் விற்கவோ, வெளியிடவோ கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment