ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு சிறையில்
இருக்கும் 5 மீனவர்களை மீட்கக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அவர்களை விடுவிக்க கோரி, ராமேஸ்வர மீனவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட
போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், நாளை தங்கச்சி மடம் பகுதியில்
மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மேலும் 5 மீனவர்கள் இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த தகவல் ராமேஸ்வரம் பகுதி மக்களிடையே பெரும்
பதற்றத்தையும்,கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜஸ்டின், சந்திரன், ஆலிவர், மாரி மற்றும் பத்மனாபன்
உள்ளிட்ட 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் நெடுந்தீவு பகுதியில் உள்ள குயின்டவர் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment