கடந்த ஓரிரு நாட்களில் பெய்த அடைமழை காரணமாக பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் வீதிகளின் போக்குவரத்துகள் முடக்கப்பட்டதோடு,
பொதுச்சொத்துகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்வடைந்திருப்பதால் நீர்வழிப்போக்குவரத்தும் தடைப்பட்டிருக்கிறது. வீதிகளில் ஆறுபோன்று நீர் வழிந்தோடுகிறது.
15 வருடங்களுக்கு பின்னர் பிரிட்டன் இதுபோன்ற வெள்ள அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

No comments:
Post a Comment