Monday, December 12, 2011
நுழைந்தால் சுட்டு தள்ள பாகிஸ்தான் உத்தரவு!
அத்துமீறி நுழையும் அமெரிக்க விமானங்களை அனுமதியின்றி சுட்டு வீழ்த்த பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை கடந்த மாதம் 26ம் தேதி நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர்.
இதற்கு பாகிஸ்தானில் அனைத்து தரப்பிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தில் இருந்து அமெரிக்க படை வெளியேற 15 நாள் கெடு விதித்தது பாகிஸ்தான்.
கெடு விதிக்கப்பட்ட கடைசி நாளான நேற்று அமெரிக்க படை முற்றிலும் வெளியேறியது. ஷாம்சி தளத்தில் இருந்த 5 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அங்கிருந்த ரேடார்கள், உட்பட பல்வேறு நவீன கருவிகளை அகற்றி விட்டு, விமான தளத்தை பாகிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது, ஷாம்சி தளம் பாகிஸ்தான் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை மாற்றி, புதிய பாதுகாப்பு கொள்கையை பாகிஸ்தான் ராணுவம் வகுத்துள்ளது.
அதில், இனி நேட்டோவின் ஆளில்லா விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால், எந்தவொரு அனுமதியின்றி சுட்டு வீழ்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷாம்சி விமான தளத்தை (யுஏஇ) 1992ம் ஆண்டு ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பாகிஸ்தானுக்கு ஒப்பந்த முறையில் வழங்கியது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப்பின் அதை நேட்டோ படையின் பயன் பாட்டுக்கு பாகிஸ்தான் கொடுத்தது.
இந்நிலையில் ஷாம்சி தற்போது பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் மீண்டும் யுஏஇயிடம் ஒப்படைக்க அந்நாட்டு தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment