Monday, December 26, 2011

விதவைப் பெண்களே அதிகம் விபச்சாரத்தில்...!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் விடயத்தில் அரச அதிகாரிகள் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.


யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (26) திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னி யுத்தத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர் வடமராட்சியிலுள்ள தனது தாயாரின் நிலத்தில் குடியிருக்க வந்தபோது அவருக்கு வீட்டுத் திட்டம் வழங்க அந்தப் பிரதே கிராம சேவகர் மறுத்துள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு பல சம்பங்கள் நடைபெற்றுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் தம்மிடம் வந்து முறையிடுவதாகவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழுவதையே அரசாங்கம் விரும்புவதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் யுத்தத்தால் 29,000 பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகியுள்ளனர் என்றும், 350 குழந்தைகள் சட்ட வரையறைக்குட்படாது பிறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் விபசாரத்தில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் இதில் கூடுதலானவர்கள் விதவைப் பெண்கள் என்றும் கூறிய அரச அதிபர் இமெல்டா சுகுமார், ´வறுமை காரணமாக 6 பிள்ளைகளின் விதவைத் தாய் ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்துள்ளார்´ என்று சுட்டிக்காட்டியதுடன்,

´மக்களின் அவல நிலையைப் பேசி பிழைப்பு நடத்துபவர்களும், விமர்சனம் செய்பவர்களும் இந்த நிலைமையை மாற்றியமைக்க முன்வரவேண்டும்´ என வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

free counters