Thursday, December 1, 2011

ஆஸ்திரியாவில் உலகின் முதலாவது செக்ஸ் பாடசாலை!

உலகின் முதலாவது செக்ஸ் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் மாணவர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் படிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களும் மிகுந்த சவால்களை எதிர்நோக்க உள்ளார்கள்.

ஆஸ்திரியாவில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றே செக்ஸ்க்காக மட்டும் ஆன இந்த பாடசாலையை ஆரம்பித்துள்ளது.
குறித்த பாடசாலையில் காதல் செய்வது எப்படி, பாலியல்நிலைகள், தொழில் நுட்பம், உடற்கூறியல் மற்றும் காதலனை  தழுவுவது எப்படி போன்ற செயன்முறைகள் தியறியாகவும் செய்முறைப் பயிற்சியாகவும் போதிக்கப்படுமாம்.
செக்ஸ் பாடசாலையில் தலைமை ஆசிரியை ஆக உள்ள Ylva Marie Thompson கருத்துத் தெரிவிக்கையில், இங்கு பாலியல் தொடர்பான அனைத்து செயன்முறைகளும் தயக்கமின்றி போதிக்கப்படும்.
Austrian International School of Sex (AISOS) என்ற இந்த பாடசாலை தொடர்பான விளம்பரங்கள் ஆஸ்திரேலிய தொலைக்காட்சிகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பாடசாலையில் சேர 1,400  ஸ்டேர்லிங் பவுண்கள் கட்டணமாக அறவிடப்படுகின்றன. 16 வயதுக்கு மேற்பட்ட யாரும் செக்ஸ் பாடசாலையில் இணைந்து கொள்ள முடியுமாம்.

No comments:

Post a Comment

free counters