Tuesday, January 31, 2012

நயன்தாராவுக்கு ரூ 1.5 கோடி !


சினிமாவுக்கு ‘குட்பை’ சொன்ன நயன்தாரா, திடீரென தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது முன்னணி நடிகைகளை ‘அப்செட்‘ ஆக வைத்துள்ளது. பிரபுதேவா - நயன்தாரா இடையே காதல் மலர்ந்ததையடுத்து இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. இதனால் நடிப்புக்கு ‘குட்பை‘ சொன்னார் நயன்தாரா. தெலுங்கில் அவர் நடித்த 'ஸ்ரீராம ராஜ்யம்' படம் தான் நயன்தாராவின் கடைசி படம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கடைசிநாள் படப்பிடிப்பில் அளிக்கப்பட்ட பார்ட்டியில் அவர் கண் கலங்கினார்.  இந்நிலையில் நயன்தாரா - பிரபுதேவா இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க சம்மதித்திருப்பதாகவும் கூறப்பட்டது. தெலுங்கில் தசரத் இயக்கத்தில் நாகார்ஜுனா நடிக்கும் படம் ஒன்றில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அதற்காக அவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிப்பே வேண்டாம் என்று சொல்லி  ‘குட்பை' சொல்லி விட்டு சென்ற நயன்தாராவை மீண்டும் அழைத்து இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டது தெலுங்கு பட உலகில் பலரையும் வியக்க வைத்துள்ளது.
தெலுங்கில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகைகளுக்கு கூட இவ்வளவு பெரிய தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பல முன்னணி நடிகைகளை அப்செட் ஆக்கியுள்ளதாம்.

No comments:

Post a Comment

free counters