Monday, January 2, 2012

இளவரசர் ஹாரி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் திட்டம்!

இங்கிலாந்து அரச குடும்ப வாரிசுகளில் ஒருவரான இளவரசர் ஹாரி(27) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் மே மாதத்தில் எவரெஸ்டில் ஏற அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக காயமடைந்த படைவீரர்களுக்கு உதவ நிதி திரட்ட "வாக்கிங் வித் த வூண்டட" என்ற அமைப்பின் சார்பில் கடந்த வருடம் வடதுருவத்துக்கு பயணம் செய்திருந்தார் ஹாரி.
ஆனால் ஹாரியின் எவரெஸ்ட் திட்டம் குறித்து பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர்கள் திட்டவட்டமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
இளவரசரின் இராணுவ சேவைத் திட்டங்களைப் பொறுத்தே இது குறித்து முடிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மொல்லி ஹக்ஸ் என்ற மலையேறும் வீராங்கனை இதுகுறித்துத் தெரிவிக்கையில், மே மாதம் எவரெஸ்ட் மலையேற்றக் குழுவுடன் புறப்பட உள்ளதாக ஹாரி தன்னிடம் தெரிவித்ததாகக் கூறினார். மேலும் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைய ஹாரிக்கு சாத்தியமில்லை என்றாலும், அடிவாரத்திலுள்ள முகாம் வரை அவர் செல்ல வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

free counters