பதுளை - மெதபத்தான பகுதியில் குடித்துவிட்டு வீடு சென்று மனைவியுடன்
கலகத்தில் ஈடுபட்ட கணவனை மனைவி பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவமொன்று
இன்று (02) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (02) அதிகாலை 01.30 - 02 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடித்துவிட்டு வந்த கணவன் மனைவியுடன் கலகத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது அடியை தாங்கிக் கொள்ள முடியாது ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் தாக்கியுள்ளார்.
அதிக போதையில் இருந்தமையால் கணவன் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment