Tuesday, January 31, 2012

ஆளில்லா விமானத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா தான்: ஒபாமா

மறைந்திருந்து தாக்கும் இந்த போர் குறித்து பெரும் அதிருப்தி உருவாகியுள்ள நிலையில், ஒபாமா துணிந்து அந்த தாக்குதல்களை மக்கள் முன்னிலையில் நியாயப்படுத்தியுள்ளார். இது போன்ற தாக்குதல்கள் FATA எனப்படும்.
மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மலைவாழ் மக்களின் பகுதிகளில் நடைபெற்ற இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் எல்லையில் வாழும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்டது என்று கூறினார்.

மேலும் சி.ஜ.ஏ என்ற அமெரிக்க உளவு நிறுவனமே இத்தாக்குதல்களை அல்கொய்தா மற்றும் தலிபான் மீது நடத்தி வருகின்றது என்றும் கூறினார். கடந்த 2010ம் ஆண்டில் 101 தாக்குதல்களும், 2011ம் ஆண்டில் 64 தாக்குதல்களும் நடைபெற்றதாக AFP செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இத்தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், காயமடைந்துமிருப்பதால் பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா மீது கோபத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.பாகிஸ்தானில் ஆளில்லா விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா தான் என்று முதன் முறையாக ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தீவிரவாதிகள் அதிகமாக இருந்ததால் ஆளில்லாத விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது தாம் தான் என்றும், இது அமெரிக்காவின் சாதுரியம் என்றும் தெரிவித்துள்ளார்.
கூகுள் சமூக இணையத்தளத்தில் தோன்றிய ஒபாமா ஒரு மணிநேரம் நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் 1,300,000 கேள்விகளை நேயர்கள் அனுப்பியிருந்தனர்.
அவற்றில் தேவையானவற்றை மட்டும் கூகுள் பணியாளர் தேர்ந்தெடுத்து ஆறு பேர் மூலமாக அந்தக் கேள்விகள் ஒபாமாவிடம் கேட்கப்பட்டு நேயர்களுக்கு பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இவர் பேட்டியளித்த வேளையில் துணை ஜனாதிபதியான ஜோ பிடெனும்(Joe Biden)மற்ற அலுவலக அதிகாரிகளும் ட்விட்டரில் இவரோடு இணைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

free counters