Sunday, February 26, 2012

ஏமன் அதிபர் மாளிகை வளாகம் அருகே குண்டுவெடிப்பு: 20பேர் பலி


ஏமன் அதிபர் மாளிகை வளாகம் அருகே நடந்த கார் குண்டு தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
அரேபிய வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டின் ஹர்டாமவுட் மகாணத்தில் அந்நாட்டு அதிபர் அபத்-ராபு மன்சூர் ஹாதியின் மாளிகை உள்ளது.



இங்கு மர்மநபர் ஒருவர் கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.


ஏற்கனவே ஏமன் அதிபருக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கார் குண்டு தாக்குதல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


இத்தாக்குதலுக்கு அல்‌-கொய்தா பொறுப்பேற்றிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளன. மேலும் சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு புதிய அதிபர் வேட்பாளர் அபத்-ராபு மன்சூர் ஹாதி, புதிய அதிபராக பதவியேற்ற நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

No comments:

Post a Comment

free counters