Wednesday, February 29, 2012
சிரியா விவகாரத்தில் லிபியா போன்று நேட்டோ தலையிடாது !
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் அங்கு நடந்து வரும் கலவரத்தில் இதுவரைக்கும் 7500 கொல்லப்பட்டதாக ஐ.நா அறிவித்துள்ளது.
லிபியாவில் புரட்சி படையினருக்கு ஆதரவாக களமிறங்கியது போல சிரியாவில் தலையிடும் எண்ணம் இல்லை என்று நேட்டோ படை தலைவர் கூறியுள்ளார்.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ படையின் தலைவர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன் வாஷிங்டனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சிரியாவில் நிலவும் சூழ்நிலையை நேட்டோ படை கூர்ந்து கவனித்து வருகிறது.
ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக போராடும் மக்களை இராணுவ தாக்குதல் நடத்தி கொல்வது கண்டனத்துக்கு உரியது.
லிபியாவில் ஜனாதிபதி கடாபியின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு ஆதரவாக நேட்டோ வான்வழி தாக்குதல் நடத்தியது.
ஐ.நா முடிவு மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஆதரவின் பேரிலேயே நேட்டோ தலையிட்டது. அதுபோன்ற நிலை சிரியாவில் இல்லை. எனவே லிபியா விடயத்தில் நேட்டோ படை தலையிடாது என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment