Monday, March 5, 2012
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: புதின் அபார வெற்றி
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்று, 3வது முறை ஜனாதிபதியானார்.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி விளாடிமிர் புதின் போட்டியிட்டார்.
ரஷ்ய நாட்டின் சட்டப்படி ஒருவர் 3 வது முறையாக மீண்டும் ஜனாதிபதியாக முடியாது. எனவே, சென்ற முறை ஜனாதிபதியாக தெரிவான புதின், தமது நம்பிக்கைக்குரிய டிமிட்ரி மெத்வதேவை ஜனாதிபதியாக்கினார்.
இந்நிலையில் நேற்று நடந்த ரஷிய ஜனாதிபதிக்கான வாக்குப்பதிவில் 62 சதவீத வாக்குகள் பெற்று புதின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் 3 வது முறையாக ஜனாதிபதியாக தெரிவாகி புதின் சாதனை படைத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment