Thursday, March 29, 2012
பிடல் காஸ்ட்ரோவை சந்தித்தார் போப் பெனடிக்ட்!
கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள 16வது போப் பெனடிக்ட் முன்னாள் கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சந்தித்து பேசினார்.
இவர்களின் சந்திப்பு வேடிகன் தூதரகத்தில் நடந்தது.
ஒரு காலத்தில் தேவாலயத்தில் பணி செய்து கொண்டிருந்த சிறுவன் ஃபிடல் கோஸ்ட்ரோ இயேசு சபை பாதிரியார்களால் வளர்க்கப்பட்டவர்.
இப்போது போப்பைச் சந்திக்க வந்தபோது அவரிடம் தற்போதுள்ள தேவாலயப் பாடங்கள் குறித்து கேட்டறிந்தார்.
போப் இன்று சந்திக்கும் சவால்கள் குறித்தும் அறிந்து கொண்டதாக வேட்டிகனின் செய்தித் தொடர்பாளர் மறை திரு ஃபெடரிகோ லாம்பார்டி தெரிவித்தார்.
போப் அவர்கள் ஃபிடல் கேஸ்ட்ரோவிடம் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவது மற்றும் ஆன்மீக விடுதலை பெறுவது குறித்தும் அவற்றின் பங்கு குறித்தும் பேசினார். இவர்களது பேச்சில் இடையிடையே நகைச்சுவையும் கலந்திருந்தது.
தங்கள் வயதைக் குறித்து இருவரும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டனர். கேஸ்ட்ரோவுக்கு 85 வயது ஆகிவிட்டது. போப்புக்கு அடுத்த மாதம் 85 வயது ஆக உள்ளது. இந்நிலையில் போப் கேஸ்ட்ரோவிடம் எனக்கு வயதாகிவிட்டது எனினும் என்னால் எனது வேலைகளைப் பார்த்துக் கொள்ள முடியும் என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு அமைதியாகவும் ஆர்வத்தோடும் உயிர்த்துடிப்போடும் இருமனம் கலந்து இருந்ததாக போப் தெரிவித்தார்.
பொதுவுடைமை (கம்யூனிச) ஆட்சி நடக்கும் கியூபா தீவுக்கு மூன்று நாள் வருகையாக வந்திருந்த போப் கியூபா மக்களுக்கு இன்னும் அதிகச் சுதந்திரமும் அவர்களிடம் உரோம கத்தோலிக்க சமயத்தின் பங்கும் அவசியம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment