பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில், 2 பைபிள் பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர்
.
ஒசாமா தங்கியிருந்த வீட்டை பாகிஸ்தான் அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு இடித்து தள்ளினர். அப்போது அவரது வீட்டில் 2 பைபிள் பிரதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பின்லேடனை சுட்டுக் கொன்ற பின்னர், அந்த வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட்டோம்.எனினும் வீட்டை இடிக்கும் போது மறைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பைபிள் பிரதிகளை கைப்பற்றினோம். அந்த பைபிள்கள் ஆங்கில மொழியில் உள்ளன. அந்த பைபிளில் சில பக்கங்கள் மடித்து வைக்கப்பட்டிருந்தன. மேலும் பைபிளில் பல வாசகங்கள் அடிகோடிட்டு இருந்தன என்றனர்.
பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அதிகாரிகள் கூறுகையில், அடுத்த தாக்குதலின் போது அதற்கு நியாயம் சொல்ல பைபிளின் சில பகுதிகளை குறிப்பிட்டு வைத்துள்ளதாக தெரிகிறது.
அந்த வாசகங்களை வைத்து அல்கொய்தாவின் திட்டம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இடிக்கப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 ரேடியோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றனர்.

No comments:
Post a Comment