Sunday, April 15, 2012

பயங்கரவாதிகளை தப்பிக்க விட்ட தலிபான்கள்!


பாகிஸ்தானில் சிறைச்சாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய தலிபான்கள், அங்கிருந்த பயங்கரவாதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கைதிகளை தப்பிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் வடமேற்கு உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசுக்கு எதிராக தலிபான்கள் செயற்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் பன்னு நகரில் பக்துன்ஹவா என்ற சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் பயங்கரவாதிகளும் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இச் சிறைச்சாலையை 150க்கும் மேற்பட்ட தலிபான்கள் பயங்கர ஆயுதங்களுடனும்,கையெறி குண்டுகளுடனும் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலைத்தொடர்ந்து சிறையில் 380க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிவிட்டனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகள் என்று ஷபியாக்கான் என்ற சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

free counters