உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளுல் ஒன்றான நயகராவில் குளிக்கும் போது கல்லூரி மாணவன் ஒருவன் மூழ்கி மரணமடைந்தான்.
நேற்று முன்திகதி( சனிக்கிழமை) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்று பிற்பகல் நீர்வீ்ழ்ச்சிக்கு அடுத்ததாக ஓடும் தடாகத்தில் 22 வயதுடைய கல்லூரி மாணவன் நீந்தி விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சுழியில் சிக்கி அந்த மாணவன் திணறியுள்ளார். அவரைக் காப்பாற்றப் பலரும் முயன்ற போதும் தண்ணீருக்கு அடியில் இழுத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் அவரை மீட்ட மீட்புக்குழுவினர் இறந்ததாக அறிவித்தனர். மற்றபடி அவருடைய பெயர், விபரம் வெளியிடப்படவில்லை
No comments:
Post a Comment