Thursday, July 5, 2012

புலி மற்றும் நாய் கட்சி சின்னங்களாக முடியாது


எதிர்வரும் தேர்தல்களில் புலி மற்றும் நாய் ஆகியவற்றை கட்சி சின்னங்களாக பயன்படுத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்னர் சில கட்சிகள் தமது சின்னமாக புலி மற்றும் நாய் ஆகியவற்றை பயன்படுத்தியிருந்ததாக ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

விசேட சந்தர்ப்பமாக கருதி எதிர்வரும் காலங்களில் குறித்த இரண்டு சின்னங்களையும் தடை செய்யத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கலசம், ஜோடி வாள், தாமரை மலர், சிங்கம், சம்மட்டி போன்றவற்றையும் கட்சி சின்னமாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை மாகாணசபைத் தேர்தல் நடைபெறும் காலப் பகுதியில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமையினால் பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி வாங்கிகளைப் பயன்படுத்தி பிரசாரம் செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters