Tuesday, August 23, 2011

பதில் வேண்டாம், பார்வை போதும்...

அவளிடம் ஆசைகளை
கவிதைகளாய் சேர்த்து வந்தேன்,
அவள்-வீட்டு குப்பை கோணியில்
சேர்த்து வந்தது தெரியாமல்.
பகைவர்கள் கொட்டிய 
வார்த்தைகளை மறந்த மனம்,
உயிரவளின் ஒத்த வார்த்தையில் 
மணந்தது மரணம்…
அழுது பேச ஆளில்லாமல் போனது,
விழுது இல்லாமல் ஆலமர வேர் வாடுது,

பிடிக்கவில்லை என்றவளே! கண்ணீர்
வடிக்கவில்லை என்றாக,
ஒரு நாளொரு பொழுதில்
ஒரு நிமிடமாவது ஒதுக்கு…
பார்க்கமாட்டேன் என்றவளே!
ஒரு முறை என் முன் தோன்றினால்
அகற்றிவிடுவேன்,
என் முகத்தில் நான் அமைத்த முள் வேலியை…

எதுவும் கேட்கமாட்டேன் என்றவளே!
என் இதயத்தை மட்டும் ஏன்
கேட்காமலே எடுத்து கொண்டாய்,
எடுத்து கொண்ட இதயத்தை தெருவோரம்
ஏன் விட்டு சென்றாய்,
பாவம்!!!
என் இதயம் ஊமை என்பதால?
இல்லை ஏழ்மை என்பதால?
ஊமையின் வலி வெளியில் தெரியாது,
உள்ளம் அழுகிறது, இதயம் வலிக்கிறது…
என்னை பிடிக்கவில்லையாம் அவளுக்கு!!!!

No comments:

Post a Comment

free counters