Sunday, August 28, 2011

கோளாறு காரணமாக இலங்கை விமானம் இந்தியாவில் தரையிறக்கம்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கப்பட்டுள்ளது என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏழு பயணிகளுடன் கொழும்பிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற குறித்த விமானம் நடுவானில் கோளறு ஏற்பட்டதன் காரணமாக அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் காலை 8.15 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

free counters