Sunday, October 16, 2011

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மீது இன்று மதியம் ஒரு மணியளவில் இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் தவபாலன் (வயது-25) என்பவரே காயமடைந்தவர் ஆவார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் தலைவரான தவபாலன் தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்திக்கு அண்மித்த பகுதியில் வைத்து இனந்தெரியாத   குழுவினால் தாக்கப்பட்டுள்ளார்.
இராணுவ முகாமுக்கு அண்மித்த பகுதியில் மக்கள் பலரும் பார்த்துக் கெண்டிருந்த போதே இத் தாக்குதலை இனந்தெரியாதோர் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான தவபாலன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருகின்றார்.

No comments:

Post a Comment

free counters