Sunday, October 16, 2011
சுவிஸ் விமான விபத்தில் பிரிட்டிஷ் விமானி பலி
சுவிஸில் நிகழ்ந்த விமான விபத்து ஒன்றில் பிரிட்டிஷ் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். சிறியரக விமானத்தில் பயணம் செய்த 29 வயதான பிரிட்டிஷ் விமானியும் 40 வயதான பயணியுமே உயிரிழந்தவர்களாவார்.
சுவிஸின் மேற்குப் பகுதியான Colombier என்ற இடத்திலிருந்து புறப்பட்ட விமானமே மேற்படி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
புறப்பட்ட அரை மணி நேரத்தில் கட்டுப்பட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்களும் ஒரு விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டன.
நேற்று மாலை நான்கு மணியளவில் சுவிஸின் Neuchatel என்ற ஏரிக்கரைக்கு அருகில் விமானத்தின் சிதறிய பாகங்கள் மீட்க்கப்பட்டன.
விபத்து நடந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment