Tuesday, October 25, 2011

கடாபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் பூதவுடல்; அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை காலை குறிப்பிடப்படாத இடமொன்றில் கடாபியன் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டதாக லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்ஸில் வட்டாரங்கள்தெரிவித்ததாக அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வியாழனன்று கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட கேணல் கடாபியின் சடலம் இறைச்சிகளை பாதுகாக்கும் கொள்கலனொன்றில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றுவரை அச்சடலத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்

No comments:

Post a Comment

free counters