கொஸ்கொட பகுதியில் 70 வயது மூதாட்டியும் குருவிட்ட மற்றும் கிரியுல்ல ஆகிய பகுதிகளில் 15 வயதுடைய இரு சிறுமிகளும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள் குறித்து தெரியவருவதாவது,
கொஸ்கொட - ஹித்தருவ பிரதேசத்தில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் 2011.11.22 அன்று இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு நேற்று கிடைத்த முறைப்பாட்டை அடுத்து விசாரணை நடத்திய பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி குருவிட்ட ஏரத்ன பகுதியில் 15 வயது சிறுமியின் காதல் தொடர்பால் 22 வயதுடைய இளைஞன் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று இரத்தினபுரி நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கிரியுல்ல கிரிமெட்டியா - நெட்டும்வெவ பிரதேசத்தில் 15 வயதில் காதல் கொண்ட சிறுமி 23 வயது காதலனிடம் கற்பை பறிகொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment