இந்திய கர்நாடகா மாநிலத்தில் உள்ள தரம்வாய்ந்த சர்வதேச கல்வி வழங்குநர்
குழு என அழைக்கப்படும் பீஜிஎஸ் குழு (BGS group) நிறுவனத்தாருக்கு
இலங்கையில் சர்வதேச பாடசாலை அமைக்க 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் இக்காணி வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.
‘BGS Utsav 2011’ எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தரமான கல்வியை வழங்கி வரும் இந்நிறுவனத்தின் ஊடாக இலங்கை
மாணவர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்குடனேயே குறித்த காணி
வழங்கப்பட்டுள்ளதாக மஹிபால ஹேரத் குறிப்பிட்டார்.
காணி தொடர்பான ஆணவத்தை சம்பரமுவ மாகாண முதலமைச்சரிடம் இருந்து BGS குழு
அதிகாரிகளான பலகனகதரனத மகா சுவாமிஜி, ஸ்ரீ அடிசுன்சங்கரி முட் ஆகியோர்
பெற்றுக் கொண்டுள்ளனர்.

No comments:
Post a Comment