பெரம்பூர் அடுத்த கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரில் விபசாரம் நடப்பதாக சிந்தாதிரிப்பேட்டை விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லிக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் மாறு வேடத்தில் சென்று கண்காணித்தனர்.
அப்போது ஒரு வீட்டுக்கு வாலிபர்கள் வருவதும் போவதுமாக இருந்தது. போலீசார் திடீரென அந்த வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அங்கு 2 அறைகளில் 2 பெண்கள் அரை நிர்வாண நிலையில் இருந்தனர். சில இளைஞர்கள் தப்பி ஓடினர்.
விபசாரம் நடத்திய வியாசர்பாடி முல்லை நகரை சேர்ந்த சக்தி (எ) பத்மபிரியா (40), அவரது மகன் சதிஷ் (23) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஆந்திராவை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர். விபசாரத்துக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட 2 பெண்களையும் சினிமாவில் நடிக்க ஏற்பாடு செய்வதாக ஆசை வார்த்தை கூறி, விபசாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து அவர்களை மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைதான இருவரும், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
* சென்னை எம்ஜிஆர் நகர் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் முகமது ஜாபர் (எ) ரமேஷ் (40). சொந்த ஊர் கேரளா. ஜாபர்கான்பேட்டையில் 2 இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தார்.
முகமது ஜாபரை போலீசார் கைது செய்து 2 இளம்பெண்களையும் மீட்டு மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
முகமது ஜாபர் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:
Post a Comment