கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவம் ஒன்றிலேயே ஆணைக்குழுவின் தலைவரால் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 பேரைக்கொண்ட ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளில் 400 பக்கங்களை கொண்ட அறிக்கையே இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு, 2002 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், இடம்பெற்ற போர்நிறுத்த உடன்பாட்டின் தோல்வி உட்பட்ட விடயங்கள் தொடர்பாக தமது விசாரணைகளை நடத்தியது.

No comments:
Post a Comment