தென்னிந்திய பட உலகில் உள்ளவர்கள் யாருடைய நேரத்தையும் வீணடிப்பதில்லை என்று சமீரா கூறியுள்ளார்.
பாலிவுட்டிலும், கொலிவுட்டிலும் நேரத்தை கணக்கிட்டு நடித்து வருகிறார் சமீரா ரெட்டி.
நாயகன் விஷாலுடன் வெடி படத்தில் நடித்த சமீரா தற்பொழுது ஆர்யா-மாதவன் இருவருடனும் லிங்குசாமியின் வேட்டை படத்தில் அமலா பாலுடன் போட்டி போட்டு நடித்துள்ளார்.
இதுபற்றி சமீரா ரெட்டி கூறியதாவது, பாலிவுட்டுக்கும், கொலிவுட்டுக்கும் நிறைய வித்தியாசங்களை பார்க்க முடிகிறது. தென்னிந்திய பட உலகில் உள்ளவர்கள் யாருடைய திகதிகளையும் நேரத்தையும் வீணடிக்க விரும்புவதில்லை.
தொழில் பக்தியோடு பணியாற்றுகிறார்கள். படத்தில் நடிக்கிறவர்கள் மேல் முழு அளவில் நம்பிக்கை வைக்கிறார்கள். அன்பை பொழிகிறார்கள்.
தற்பொழுது பிரியதர்ஷன் இயக்கும் இந்தி படத்தில் அழகியாக வருகிறேன். இன்றைய சினிமாவில் அழகி கதாபாத்திரத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை படத்தயாரிப்பாளர்கள் அறிந்து வைத்துள்ளார்கள்.
அதனால் படத்தில் அழகியின் நடனம் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பட உலகில் உள்ள ஒவ்வொரு அழகிகளையும் நான் மனப்பூர்வமாக மதிக்கிறேன் என்று சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment