முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில் எம்பி துமிந்த சில்வாவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர முல்லேரியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவத்தில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான எம்பி துமிந்த சில்வா சிகிச்சைகளுக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லேரியா கொலை சம்பவம் தொடர்பில் முழுமையான சாட்சி அறிக்கை இன்று சமர்பிக்கப்பட வேண்டும் என குற்ற விசாரணை பிரிவினருக்கு அறிவிக்கப்படிருந்த நிலையில் அவர்கள் இன்று அறிக்கையை சமர்பித்து 15 சந்தேகநபர்களை பெயரிட்டனர்.
அதில் எம்பி துமிந்த சில்வாவின் பெயர் இருக்கவில்லை.
இந்நிலையில் மரண விசாரணை மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் துமிந்த சில்வாவின் பெயர் காணப்படுவதாக நீதிமன்றில் கூறப்பட்ட நிலையில், துமிந்த சில்வாவை சந்தேகநபர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுமாறும் அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:
Post a Comment