Tuesday, November 22, 2011

பாலிவுட் அழகி போல ஆட விரும்பும் அனுஷ்கா.

பாலிவுட் கதாநாயகன் சல்மான் கான் நடித்த தபாங் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
பாலிவுட் கதாநாயகன் சல்மான் கானுக்கு வெற்றி தேடித் தந்த தபாங் படத்தை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் எடுத்துள்ளார்கள்.
இதையடுத்து தபாங் படத்தை தெலுங்கில் கப்பார் சிங் என்ற பெயரில் ரீமேக் படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
கப்பார் சிங் படத்தில் தெலுங்கு கதாநாயகன் பவன் கல்யாண் நடிக்கிறார். இந்தி தபாங் படத்தில் பாலிவுட் குத்தாட்ட அழகி மலைகா அரோரா ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டதை ரசிகர்கள் விரும்பி ரசித்தார்கள்.
இந்திய திரையுலகில் தற்போது குத்தாட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. வெற்றிப் படத்தின் முக்கிய அம்சமாக ஒரு அழகிப் பாட்டு திகழ்கிறது என்கிறது பட வட்டாரம்.
தெலுங்கு கப்பார் சிங் படத்தை இயக்கும் இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் ஒரு பாட்டுக்கு ஆட அனுஷ்காவிடம் பேசியுள்ளார்.
இந்த ஒரு பாட்டிற்காக சம்பளத்தை அதிகமாக தர முடிவு செய்துள்ளார்கள். அனுஷ்காவும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட் குத்தாட்ட அழகி மலைகா ஆடியது போல சிறப்பாக ஆட அனுஷ்கா விருப்பம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters