Tuesday, November 22, 2011

ஈரான் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு.

ஈரானின் நிதி மற்றும் அணுசக்தி துறைகளின் மீது கனடா புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்ற தகவலை கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பேர்டு தெரிவித்துள்ளார்.
ஈரானின் மத்திய வங்கி உட்பட வேறு பல வங்கிகளோடும் எந்தவித நிதிப் பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று கனடா தடை விதித்துள்ளது.
ஈரானில் இருக்கும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தம் தாய்நாட்டில் உள்ள தன் உறவினர்களுக்கு பணம் அனுப்பலாம். இது தவிர கனடா நாட்டினர் எவரும் ஈரானோடு எந்த தொழில் தொடர்பும் வைக்கக்கூடாது என்று கனடா தெரிவித்துள்ளது.
பொருளாதார நடவடிக்கைக்கான சிறப்புச் சட்டத்தின்படி கனடாவை சேர்ந்தவர்கள் ஈரானில் உள்ள 47 தனிமனிதர் மற்றும் 279 நிறுவனங்களோடு தொடர்பு இல்லாமல் தங்களுக்குள் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
ஈரானிய புரட்சிக் காவல்படையின் தலைமையின் மீது அதிருப்தி கொண்டுள்ள கனடா முறித்துக் கொள்ள விரும்புகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் சர்வதேசச் சமூகத்தோடு ஈரான் இசைந்து வராததேயாகும்.
அணுசக்தி உற்பத்தியிலும் உள்ளுர் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதிலும் ஈரான் சர்வதேசக் கருத்துக்களை அலட்சியப்படுத்துகிறது.
கனடாவின் இந்த நடவடிக்கைகளுக்கு புதிய ஜனநாயக் கட்சியின் வெளியுறவுத் துறை விமர்சகர் ஹெலினா லேவர்டீர் ஆதரவு தெரிவித்தார். மேலும் இவர் கனடா தன் பழைய நட்புநாடுகளோடு மட்டுமின்றி சீனா, ரஷ்யா போன்ற நாடுகளோடும் புதிதாக நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
கடந்த மாதம் கனடா கட்டுப்பாடுகளை விதித்த ஐந்து ஈரானியரில் நால்வர் இஸ்லாமிய புரட்சிப் படையைச் சேர்ந்தவர் ஆவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஐ.நா.பாதுகாப்புக் குழு நான்கு முறை கட்டுப்பாடுகளை விதித்தது. இதுதவிர கனடாவும் 2010ம் ஆண்டு யூலை மாதம் கூடுதலாகப் பல கட்டுப்பாடுகளை விதித்தது.
இவ்வாறு புதிது புதிதாகக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குக் அடிப்படைக் காரணம் சர்வதேச அணு சக்தி அமைப்பு, ஈரான் ரகசியமாக அணுகுண்டு தயாரிக்கின்றது என்று நம்புவதே ஆகும். இன்னும் இவ்வாறான தயாரிப்புகளை ஈரான் செய்து வருவதாகப் பலரும் நம்புகின்றனர். ஆனால் இதற்குப் பதிலளித்த ஈரான் தான் அமைதி நாடியே அணுசக்தி முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தது.
ஈரான் நாடு உலக பொருளாதார அமைப்பிலிருந்து தான் பிரிந்து விடும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் ஈரானில் அணுசக்தி ஆய்வு மூலமாக கறுப்புப்பணத்தை வெள்ளையாக மாற்ற முயல்கின்றது என்று அமெரிக்காவின் நிதித் துறை தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சிக்கு உதவுகின்ற தனிமனிதர்கள் மற்றும் பதினோரு அமைப்புகள் மீதும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. மேலும் எண்ணெய் மற்றும் பெட்ரோ ரசாயணத் தொழிற்சாலைகளை மீது தாம் ஏற்கெனவே விதித்திருந்து கட்டுப்பாடுகளை விரிவாக்கியுள்ளது.
உலக நிதியமைப்பில் இருந்து ஈரானின் மத்திய வங்கியை விலக்கி விடும் முயற்சியையும் அமெரிக்கா செய்கின்றது. எண்ணெய் விலை உயர்வு அமெரிக்காவையும் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. இதற்கு தீர்வு காணவும் இந்நாடுகள் முயன்று வருகின்றன.
திங்கட்கிழமையன்று பிரிட்டன் தனது நிதி நிறுவனங்களை ஈரானிய நிதி நிறுவனங்களோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையிட்டது. ஈரானிய எண்ணெய் நிறுவனங்களோடு தொடர்பு வேண்டாம் என்று நேரடியாக பிரிட்டன் தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment

free counters