Thursday, November 3, 2011

நம்பாதீங்க மக்களே நம்பாதீங்க - திரிஷா

என்னை பற்றி அதிகளவு பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை த்ரிஷா ஆவார். தற்பொழுது மங்காத்தா படத்தைத் தொடர்ந்து விஷால் ஜோடியாக சமரன் படத்தில் நடிக்கிறார்.

தற்பொழுது த்ரிஷா, ஐதராபாத்தில் நட்சத்திர ஹொட்டல் கட்டுவதாக செய்திகள் பரவின. இந்த செய்திகளை பொய் என்றும் தன் மீது அடிக்கடி பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, ஹொட்டல் கட்டுவது நல்ல விடயம்தான். அப்படி உண்மையிலேயே கட்டினால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன். இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஹொட்டல் கட்டும் ஐடியா இல்லை.

தமிழில் விஷால் ஜோடியாகவும், தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாகவும், ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாகவும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில் மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாக உள்ளேன்.

No comments:

Post a Comment

free counters