மறைந்த பிரபல பொப் பாடகர்
மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கு காரணமான அவரது மருத்துவர் கன்ராட்
முர்ரேவிற்கு என்ன தண்டனை என்பது நாளை(29.11.2011) அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி உலகப்புகழ் பெற்ற பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் அவரது பண்ணை வீட்டில் இறந்தார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வலிநிவாரணி மருந்தை அதிகம் உட்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என கூறினர்.
இதற்கு அவரது குடும்ப மருத்துவரான கன்ராட் முர்ரே(54) கொடுத்த ஆலோசனை
தான் அவரது இறப்பிற்கு காரணம் என கூறப்பட்டு அவர்மீது வழக்கு
தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணையில் 12 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கடந்த
7ம் திகதி லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் அவரை குற்றவாளி என கூறி தீர்ப்பு
வழங்கியது இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
அவர் மீதான தண்டனை 29ம் திகதிக்கு ஒத்திவைத்தது. இதைத் தொடர்ந்து
முர்ரே மீதான தண்டனை விபரம் நாளை வெளியாகிறது. இதில் அவருக்கு அதிகபட்ச
சிறைத் தண்டனையும், 100 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என
தெரிகிறது.

No comments:
Post a Comment