Thursday, November 17, 2011

ஒரு நாயகன்.


சின்னம் சிறு வயதில் கால்பந்து விளையாட்டில் ஏராளமான திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளான் இந்த குட்டிச் சிறுவன். இவனுக்கு மூன்று வயது தான் ஆகின்றது.
Charlie Jackson என்ற இந்தச் சிறுவன் அருமையாக கால்பந்து ஆடுகிறான். கால்பந்து விளையாட்டில் சில நுணுக்கங்களையும் தெரிந்து வைத்துள்ளான்.
எதிர்காலத்தில் பிரித்தானியாவின் பிரபல கால்பந்தாட்டக் கழகமான மான்செஸ்டர் யுனைற்றட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவான் என்று இவனது விளையாட்டைப் பார்ப்பவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுவனின் 38 வயதான அப்பா கருத்துத் தெரிவிக்கையில்,
இந்தச் சின்னம் சிறு வயதில் கால்பந்து ஆட அவனால் எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.
அவன் சிறு வயதில் இருந்தே கால்பந்து மேல் பைத்தியமாக இருக்கிறான்.
ஆனாலும் முறையாக கால்பந்து பயிற்சி அளிப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார் இவனது அப்பா.

No comments:

Post a Comment

free counters