Tuesday, December 6, 2011
புலிக்கு நடுங்காத டாப்ஸி!
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பார்கள். அதற்காக பசுமை அழகி டாப்ஸி பக்கத்தில் போனால் கூடவா? தமிழில்தான் படம் இல்லையே தவிர, தெலுங்கில் பிஸியாகதான் இருக்கிறார் டாப்ஸி.
இவர் கோபிசந்துடன் நடிக்கும் மொகுடு என்ற தெலுங்கு படத்திற்காக மொரீஷியஸ் போயிருந்தாராம். அங்கேதான் இந்த அடுக்குமா நியூஸ்.
புலிகள் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நந்தவனத்திற்குள் இறக்கிவிட்டார்களாம் டாப்ஸியை. ஐயோ, அம்மா என்று அலறிய டாப்ஸி முதலில் கால் வைக்கவே அஞ்ச, அவருக்கு ஒரு லைவ் டெமான்ஸ்ரேஷன் காட்டினார்களாம் படப்பிடிப்பு குழுவினர். கதை என்ன தெரியுமா?
இங்கு திரியும் புலிகள், ஆட்டைவிட பரிதாபமான நிலையில்தான் இருக்கின்றனவாம். எந்த புலிக்கும் கோபம் வருவதில்லை.
முக்கியமாக மனிதர்களை பார்த்தால் அற்ப பதரே என்று நினைத்து ஒதுங்கிப் போய்விடுகின்றனவாம். இதையெல்லாம் விலாவாரியாக இவரிடம் விளக்கிய பின்புதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையே வைத்திருக்கிறார் டாப்ஸி.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புலி இவரை லேசாக இடித்துவிட்டு போனதாம். அவ்வளவுதான். அதற்குமேல் சேதமில்லை டாப்ஸிக்கு. சரியான சீயக்காய் தூள் புலியாக இருக்குமோ என்னவோ?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment