ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்க கரு ஜயசூரியவைவிட தனக்கு
தகுதி அதிகம் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்
எதிர்கட்சி பிரதம கொரடாவுமாகிய ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வரப் போவதில்லை என கொழும்பில்
இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
தலைவர் பதவியை ஏற்கும் தகுதியுடைய தன்னைவிட மூத்தவர்கள் கட்சியில்
இருப்பதால் தான் போட்டியிட முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று (07) நேற்று இடம்பெற்ற கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சியின்
தலைவர் பதவிக்குப் போட்டிவிடுவதாக கரு ஜயசூரிய கடிதம் ஒன்றை
சமர்பித்துள்ளார் என ஜோன் அமரதுங்க குறிப்பிட்டார்.
ஆனால் கட்சியை விட்டு விலகி கரு ஜயசூரிய மீண்டும் கட்சியில் இணைந்த போது,
தான் கட்சியில் இருந்து மீண்டும் விலக மாட்டேன் எனவும், தலைமைத்துவத்துக்கு
அழுத்தம் கொடுக்க மாட்டேன் எனவும் மகாத்மா அரசியல் செய்யவுள்ளதாகவும்
உறுதியளித்துள்ளதாக ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
அவ்வாறு உறுதிமொழி அளித்துள்ள கரு ஜயசூரிய இன்று கட்சியின் தலைவர்
பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளமை ஒழுக்கமான செயலாகாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர் ரணில் விக்ரமசிங்க
மாத்திரமே என ஜோன் அமரதுங்க இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்
குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment