Thursday, December 8, 2011

இளவயது கர்ப்பம் யாழில் அதிகரிப்பு! – யாழ் அரச அதிபர்

யாழ் மாவட்டத்தில் வறுமை, அறியாமை மற்றும் உரிய பாதுகாப்பு இன்மை காரணமாக யாழில் இளவயது கர்ப்பம் தரிக்கும் பெண்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக மிகக் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் யாழ்.மாவட்ட அரச அதிபர்.

தாய்க்குரிய பக்குவ நிலையில் இல்லாத பெண்கள் கருத்தரிப்பது மிகவும் கேவலமான ஒரு விடையம் எனவும் அவர்களை தன் பிள்ளைகள் போல் பார்ப்பதாகவும் பெற்றோர்களின் பாதுகாப்பு தயது எதுவும் இல்லாத நிலையில் யாழில் பெண்கள் இருப்பதாக அரச அதிபர் இமல்டா குறிப்பிடுகிறார்.

அவர் மிகவும் கவலையுடன் மேலும் தெரிவிக்கையில்,

நான் ஊடகவியலாளர்களுக்கு இந்த செய்தியைத் தருவதினால் இனியும் யாழில் இளவயதுக் கர்ப்பம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவும், அவர்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த புள்ளி விபரங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் பருவ வயதுக் கர்ப்பங்கள் 346  பெண்களும், திருமணப் பதிவுகள் எதுவும் செய்யப்படாமல் 114 பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டள்ளார்.

குறிப்பாக பிரதேச வாரியாக பருவ வயதுக் கர்ப்பங்கள் மற்றும் திருமணமாகாமல் கர்ப்பம் தரித்தவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

free counters