Thursday, December 8, 2011

புதிய தொழில்நுட்பங்கள் பேரழிவை ஏற்படுத்தும்: ஹிலாரி எச்சரிக்கை

பயங்கரவாதிகள் புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பயோவெப்பன்கள்(BioWeapon) எனப்படும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் சூழ்நிலை இருப்பதாக அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உயிர் ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, உயிர் ஆயுதங்கள் குறித்த பயம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஈரான் மற்றும் வடகொரிய நாடுகள் மேற்கொண்டுவரும் அணு ஆயுதங்களை விட அதிகமான அழிவை இந்த உயிர் ஆயுதங்கள் ஏற்படுத்தும். புதிய ஜீன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பம், பயங்கரவாதிகளிடம் சென்றால் அணு ஆயுதங்களை விட பேரழிவை அவர்கள் இந்த உயிர் ஆயுதங்கள் மூலம் ஏற்படுத்த முடியும்.
ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு எல்லையில் உள்ள வீரர்கள் எவ்வாறு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறார்களோ, அதே போன்று இந்த உயிர் ஆயுதங்கள் விவகாரத்தில் விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள், புதிய தொழில்நுட்பங்களை பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் பார்த்துக் ‌கொள்ள வேண்டும் என்று ஹிலாரி கிளிண்டன் அவர்களுக்கு(விஞ்ஞானிகளுக்கு) கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters