Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறு விவகாரம்: தமிழக அரசின் மனு தள்ளுபடி!

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(15.12.2011) தள்ளுபடி செய்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு கடந்த 13ம் திகதி விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து இன்று(15.12.2011) பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளதில் முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக கேரள அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள அரசு போதிய பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதியளித்துள்ளது.
இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அணைக்கு மத்திய ரிசர்வ் பொலிஸ் பாதுகாப்பு கோரும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

free counters