நூறு ஆண்டுகளுக்கு பிறகு
பெரியதொரு பனிப்பொழிவை பிரிட்டன் எதிர்நோக்கியிருக்கிறது அடுத்த 48 மணி
நேரத்துக்குள் 4 inch தடிப்பு வரை பனி பொழியலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் வாகன விபத்துகளும் ஏற்பட
வாய்ப்புகள் உள்ளதால் பாதைகளில் பனி அப்புறப்படுத்தும் வாகனமும் , மேலதிக
பொலிசாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதில் குழந்தைகளின் குஷிக்கு மட்டும் குறைவில்லை, ஒருவரையும்
வீட்டுக்குள் பார்க்கமுடிவதில்லை, பனிவிளையாட்டுகளில் ஈடுபட மும்முரமாக
நிற்கின்றனர், இரண்டு நாட்கள் உங்களது வாகனத்தை கவனிக்காமல் விட்டாலே
போதும் உங்கள் வாகனம் மறைந்துவிடும்!

No comments:
Post a Comment