Tuesday, December 20, 2011

அழகி புற்றுநோயில் மரணம்

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் வெனிசுலா அழகி இவா எக்வல் (28) மரணமடைந்தார். மிஸ் வெனிசுலா பட்டம் பெற்ற பின் நடிகையான இவர், பத்திரிகையாளராகவும் இருந்தார். மிகவும் பிரபலமாக விளங்கிய இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கடந்த ஆண்டு தெரியவந்தது. மேலும், சிறுநீரக பாதிப்புக்கும் உள்ளானார்.


இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், மார்பக புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தார். நோய் தாக்கியதில் இருந்து கடுமையாக போராடி வந்த நிலையில் சனியன்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

முன்னாள் அழகி ஒருவர் இளம் வயதிலேயே இறந்தது வெனிசுலாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உடல் அழகை பேண நாம் அதிகம் செலவிடுகிறோம். ஆனால், உடல் நலத்தை பேண தவறிவிடுகிறோம் என்று முன்னாள் மாடல் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

free counters