முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் சூட்டிங்கில் முதன்முதலாக அமலாபாலை
கட்டிப்பிடித்தபோது, திடீரென அவர் சவுண்ட் கொடுத்ததும் பயந்துவிட்டேன்
என்று கூறியுள்ளார் நடிகர் அதர்வா. விண்ணைத்தாண்டி வருவாயா, கோ படங்களை
தயாரித்த எல்ரெட் குமார், இயக்குநராக
அவதரித்தும் இருக்கும் படம்
முப்பொழுதும் உன் கற்பனைகள். இப்படத்தின் நாயகனாக அதர்வாவும், நாயகியாக
அமலாபாலும் நடித்துள்ளனர். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம்
தியேட்டரில் நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.,யை டைரக்டர்கள்
கே.வி.ஆனந்த்தும், கவுதம் மேனனும் வெளியிட்டனர். அதனைத்தொடர்ந்து பிரஸ்
மீட் நிகழ்ச்சியும் நடந்தது.
பிரஸ்மீட்டில் அதர்வா, அமலாபால், டைரக்டர் எல்ரெட் குமார், இசையமைப்பாளர்
ஜீ.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் தாமரை உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
அப்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம்
பேசிய அதர்வா, முதல் நாள் போட்டோ ஷுட்டிங் சமயத்தில்தான் அமலாபாலை நான்
சந்தித்தேன். அவருடன் அறிமுகமாகிய சில நிமிடங்களில் அவரை கட்டிப்பிடிங்க
என்று டைரக்டர் கூறிவிட்டார்.
எனக்கு ரொம்ப நெர்வஸ் ஆகிடுச்சு. முன், பின் பழகாத ஒரு பெண்ணை திடீரென்று
கட்டிப்பிடிக்க சொன்னால் எப்படியிருக்கும்? இருந்தாலும் கட்டிப்பிடித்து
விட்டேன். அந்த நேரம் பார்த்து ஹக்க்க்க்க்க்.... என்று சவுண்ட் கொடுத்தார்
அமலா. நான் உடனே பயந்துவிட்டேன். நாமதான் எதுவும் தப்பு பண்ணிட்டோமா
என்று. அப்புறம் தான் தெரிந்தது, இப்படி கட்டிப்பிடிக்கும் போதெல்லாம் அவர்
சவுண்டு கொடுப்பார் என்று. அதர்வா இந்தவிஷயத்தை சொன்னபோது அரங்கமே
சிரிப்பலையில் அதிர்ந்தது.

No comments:
Post a Comment