நடுத்தர வயதுடைய இரண்டு பெண் ஆசிரியர்கள் மீது பத்து வயதே ஆன மாணவன் ஒருவன் கொலைவெறித் தாக்குதல் நடாத்தியுள்ளான்.
குறித்த தாக்குதலால் ஒரு ஆசிரியைக்கு காலிலும் மற்றைய ஆசிரியைக்கு முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்களின் தொலைபேசி மூலமான முறைப்பாட்டை அடுத்து மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த வியாழக்கிழமை மதியம் ஒருமணியளவில் தென்கிழக்கு லண்டனில் உள்ள Orpington என்ற இடத்தில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐம்பது வயதான இரண்டு ஆசிரியைகளும் உடனடியாக அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குறித்த மாணவன் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டு விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு
வருகிறார்.
மதிய இடைவேளையின் போது நடந்த கொடூரத் தாக்குதலால் அங்குள்ள மற்றைய மாணவர்களும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த சிறுவனால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் தீவிரமானதாக இருந்தது.

No comments:
Post a Comment