தீவிரவாதிகள் சில இடங்களில் குண்டுகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குல் நடத்தியதில் 120 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்த நகரில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில் தற்கொலைப்படை பயங்கரவாதி கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் செய்தியாளர், 3 காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் சிலர் வெளிநாட்டவர் என்பது தெரியவந்துள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இங்குள்ள காவல் நிலையத்தில் குண்டு வெடித்த சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும் உள்ளூர் மக்கள், தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை மாதம் அபுஜாவில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
15 கோடி மக்கள் தொகை கொண்ட நைஜீரியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சம எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment